ஆக்கிரமிப்புகள் அகற்றம்
Friday, 11 December 2009 11:43
மாநில நிதிக் குழு இடை வெளி நிரப்பு நிதியில் இருந்து மேலூர் நகராட்சிக்கு 58 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் திருவாதவூர் ரோட்டில் உள்ள மேலஉரிஞ்சி கண்மாயில் இருந்து 4.5 கி.மீ., தூரம் வரை குடிநீர் குழாய் பதிக்க முடிவு செய்யப்பட்டது. இப்பணிகளுக்கு இடையூறாக திருவாதவூர் ரோட்டில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த பல கட்டடங்கள் இடித்து தள்ளப்பட்டன. இப்பணிகளை நகராட்சி தலைவர் தமிழரசி, துணைத் தலைவர் அய்யப்பன் மேற்பார்வையிட்டனர்.