மேலூரை சேர்ந்தவர் அப்துல் கரீம், அவரது மகள் அப்சரா பானு (வயது23). தனியார் பள்ளி ஆசிரியை. இவர் பள்ளிக்கு செல்லும்போதெல்லாம் அதே பகுதியை சேர்ந்த சுதேரு, முஜிபூர் ரகுமான் ஆகியோர் கேலி-கிண்டல் செய்தனர்.
தொடர்ந்து இவர்களது அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது. நேற்றும் வழக்கம் போல் 2 பேரும் கேலி செய்தனர்.
இது குறித்து அப்சரா பானு மேலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியையை ஈவ்டீசிங் செய்ததாக சுதேரு, முஜிபூர் ரகுமான் ஆகியோரை கைது செய்தனர்.


