கார் விபத்தில் சிறுமி படுகாயம்
Wednesday, 06 January 2010 08:56
சருகுவலையபட்டியை சேர்ந்தவர் கருப்பு மகள் ரூபியா(5). இப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டின் அருகில் இவர் நடந்து சென்ற போது அவ் வழியாக வந்த மாருதி ஆம்னி வேன் ஒன்று இவர் மீது மோதியது. படுகாயத் துடன் ரூபியா மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டுள்ளார். கீழவளவு போலீசார் கார் டிரைவர் குமாரை கைது செய்தனர்.