கொட்டாம் பட்டி போலீஸ் சரகம் சொக்கலிங்க புரத்தை சேர்ந்தவர் செல்லையா (வயது 60). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் நேற்று மாலை அப்பகுதியில் வாக்கிங் சென்றார். அப்போது அப்பகுதியில் பள்ளப்பட்டியை சேர்ந்த மகாராஜா மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார். நிலை தடுமாறிய அவர் செல்லையா மீது மோதினார். இதில் படுகாயம் அடைந்த செல்லையா உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இறந்தார்.
இது குறித்து கொட்டாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொம்மைசாமி வழக்குப்பதிவு செய்து மகாராஜாவை கைது செய்தார்.


