Welcome To மேலூர்Net.Com

Home Melur-News வெள்ளளூர் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் மொத்த கடன் நிலுவை தொகையை ரூ.1 கோடிக்கு உயர்த்த முடிவு: கூடுதல் பதிவாளர் தகவல்

வெள்ளளூர் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் மொத்த கடன் நிலுவை தொகையை ரூ.1 கோடிக்கு உயர்த்த முடிவு: கூடுதல் பதிவாளர் தகவல்

E-mail Print

மேலூர் தாலுகாவிலுள்ள வெள்ளளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் உறங்கான்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் விவசாய கூட்டு பொறுப்புக்குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.

கடன் வழங்குதல், உரம், விதை வழங்குதலில் ஏதும் பிரச்சினைகள் உள்ளனவா என்று கேட்டறிந்தார். மேலும் பயிர் மருத்துவ பயன்பாட்டு மையத்தில் மண், நீர் பரிசோதனை செய்கின்றீர் களா என்பதையும் கேட்டறிந்தார்.

மண், நீர், பரிசோதனை அறிக்கையினை பார்வை யிட்டார். அதில் பரிந் துரைக்கப்பட்ட நுண்ணுயிர் உரங்கள் சங்கத்தின் மூலம் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். உறங்கான்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாய கூட்டு பொறுப்புக் குழுவுக்கு வாழை பயிரிட ரூ.2,98,200-க்கான கடன் வழங்கினார். மேலும் விவ சாய கூட்டு பொறுப்புக் குழுவிற்கு சுழல் நிதியில் வாங்கப்பட்ட தார்பாயினை கூட்டு பொறுப்புக்குழு ஊக்குநரிடம் வழங்கினார்.

வெள்ளலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாய கூட்டு பொறுப்பு குழு விற்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்துக்கு கடன் வழங்கினார். மேலும் சுழல் நிதியில் வாங்கப்பட்ட பவர் ஸ்பிரேயர் கருவியினையும் வழங்கினார்.

மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூட்ட அரங்கில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மொத்த கடன் நிலுவை ரூ.25 லட்சம் மற்றும் 50 லட்சத்துடன் கீழ் உள்ள சங்கங்களின் மொத்த கடன் நிலுவையினை ரூ.50 லட்சம் மற்றும் 1 கோடி அளவிற்கு உயர்த்துவது தொடர்பான ஆய்வு கூட்டத்தில் கூடுதல் பதிவாளர் சங்கரலிங்கம் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் சங்கங்கள் இந்த ஆண்டு முடிவுக்குள் குறியீட்டினை எய்த செயலர்களும், தனி அலுவலர்களும் முனைப் புடன் பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் பண்ணைசாரா கடன் வசூல் முன்னேற்றம் பற்றி ஆய்வு செய்தார். உர இருப்பு எஸ்.எம்.எஸ்.மூலம் சரியாக அனுப்பப்படுகிறதா என்பதையும் கேட்டறிந்தார்.

மதுரை மண்டல இணைப் பதிவாளர் டாக்டர் குமார், எம்.டி.சி. வங்கி தனி அலு வலர் ஆரோக்கிய சுகுமார், முதன்மை வருவாய் அலு வலர் ராமலிங்கம், பொது மேலாளர் ராமநாதன், சரகத் துணைப்பதிவாளர் அருளரசு, கே.கல்யாணி மற்றும் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தனி அலுவலர் சுசீலாதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Melurnet.com Paypal Donation


Melurnet.com Paypal Donation


Please Donate To Melurnet.com

Latest Websites