உறங் கான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 35). தனியார் வேனில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று காலை மேலூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தனது வீட்டுக்கான மின் கட்டணத்தை செலுத்திவிட்டு சொந்த வேலைகளையும் முடித்துக்கொண்டு மீண்டும் உறங்கான்பட்டிக்கு மொபட்டில் திரும்பிக்கொண்டு இருந்தார்.
பெருமாள்கோவில்பட்டி அருகே சென்றபோது முன்னால் லாரி ஒன்று ரோட்டோரமாக நின்று கொண்டிருந்தது. அதன் டிரைவர் அந்த வழியாக வந்தவரை நிறுத்தி விலாசம் விசாரித்துக்கொண்டு இருந் தார். இதனை கவனிக்காமல் ராமகிருஷ்ணன் அந்த லாரியின் பின்புறத்தில் வேகமாக மோதினார்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரி யில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட் டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் பலியான ராமகிருஷ்ண னுக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


