மானிய விலையில் ஜிப்சம் உரம்
Wednesday, 16 December 2009 18:44
கொட்டாம்பட்டி வேளாண்மை உதவி இயக்குநர் செல்வன் கூறியதாவது: நிலக்கடலை உற்பத்திக்கு ஜிப்சம் உரம் இருவது அவசியம்.உரத்தில் உள்ள சுண்ணாம்புச் சத்து காய்கள் திரட்சியாகவும், அதிக எடை உள்ளதாக ஆக்கவும், கந்தகச் சத்து எண்ணெய் சத்தை அதிகரிக்கவும் செய்கிறது. ஒரு ஏக்கருக்கு அடியுரமாக 80 கிலோ ஜிப்சம் இடவேண்டும். மேலுரமாக விதைத்த 40 முதல் 45 நாட்களுக்குள் ஏக்கருக்கு 80 கிலோ இட்டு செடிகளைச் சுற்றி மண் அணைக்கவேண்டும். கொட்டாம்பட்டி வேளாண்மை விரிவாக்க மையத்தில் 50 சதவிகித மானியத்தில் 58ரூபாய்க்கு 50 கிலோ கொண்ட மூடையாக வழங்கப்படுகிறது. கொட்டாம்பட்டி மற்றும் சுற்றுப்புறக் கிராம மக்கள் வாங்கி பயனடையலாம். இவ்வாறு அவர் கூறினார்.