உறங்கான் பட்டியில் கொடிக்குளத்து கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் சீரமைப்பு பணி நடந்து வருகிறது.
இந்த திட்டத்தில் பணி செய்யும் கிராம மக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை தராமல் குறைந்த அளவு ஊதியம் தருவதாகவும், தினமும் வேலை வழங்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இன்று காலை அப்பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டனர். அவர்கள் உறங்கான்பட்டி- மேலூர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.
இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிகப்பட்டது. தகவல் அறிந்ததும் கீழவளவு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, ஏட்டு குருசாமி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று மறியல் செய்தவர்களை சமரசப்படுத்தினர்.


