Welcome To மேலூர்Net.Com

Home Melur-News ஜன., 5ல் சட்டசபை முன் மறியல் : கரும்பு விவசாயிகள் அறிவிப்பு

ஜன., 5ல் சட்டசபை முன் மறியல் : கரும்பு விவசாயிகள் அறிவிப்பு

E-mail Print
டன்னுக்கு 2,000 ரூபாய் கேட்டு, ஜனவரி 5ல் சென்னையில் கோட்டை  முன், மறியலில் ஈடுபட  கரும்பு விவசாயிகள் தீர்மானித்துள்ளனர். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங் கத்தின் ஆறாவது மாநில மாநாடு மதுரை அருகே ஒத்தக்கடையில் மாநில தலைவர் பழனிசாமி தலைமையில் நடந்தது. மாநில பொதுச் செயலர் ஏழுமலை, சுந்தரராஜன் உட்பட 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
"மத்திய அரசு அறிவித்துள்ள கரும் புக் கான கட்டுப்படியான விலை தொடர் பான புதிய அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய சட்டத்தையே தொடர வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டது. மாநில தலைவர் பழனிசாமி கூறுகையில், ""ஒரு டன் கரும்பில் விவசாயிக்கு 1,298 ரூபாயும், ஆலை அதிபர்களுக்கு 2,702 ரூபாயும் கிடைக்கிறது. கரும்பு விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்கவில்லை.  டன்னுக்கு 2,000 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும்.  இதை வலியுறுத்தி ஜன., 5ல் சென்னை கோட்டை முன், ஒரு லட்சம் விவசாயிகளை திரட்டி மறியலில் ஈடுபடுவோம்,'' என்றார்.
 

Melurnet.com Paypal Donation


Melurnet.com Paypal Donation


Please Donate To Melurnet.com

Latest Websites