Welcome To மேலூர்Net.Com

Home Melur-News தலைவரை மாற்றியதால் அகதிகள் முகாமில் பதற்றம்

தலைவரை மாற்றியதால் அகதிகள் முகாமில் பதற்றம்

E-mail Print
இலங்கை அகதிகள் முகாமின் தலைவரை வேறு மாவட்டத்தில் உள்ள முகாமிற்கு மாற்றியதால் திருவாதவூர் முகாமில் பதற்றம் ஏற்பட்டது.
 மதுரை மாவட்டம் திருவாதவூரில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இம் முகாம் மக்களின் தலைவராக நடராஜன் உள்ளார். இவர் மீது சிலர் குற்றம் சாட்டி அகதிகள் மறுவாழ்வு ஆணையரிடம் மனு கொடுத்தனர்.  அதன் அடிப்படையில் நடராஜன் குடும்பத்துடன் கிருஷ்ணகிரி முகாமிற்கு செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் நடராஜன் தனது குடும்பத்தாரை விட்டுவிட்டு தலைமறைவானார்.  நடராஜனின் மாற்றத்தை எதிர்த்து, நேற்று மறியல் மற்றும் உண்ணாவிரதம் இருக்க முகாமிலிருந்த சிலர் முடிவு செய்தனர். மேலூர் இன்ஸ்பெக்டர் பாலாஜி அவர்களை சமாதானப்படுத்தினார்.
நடராஜன் தரப்பில் கூறியதாவது :  மகன் ஐ.டி.ஐ.,யும், மகள் 9ம் வகுப்பும் படிக்கிறார்கள். திடீரென முகாம் மாறினால் அவர்கள் படிப்பு பாதிக்கப்படும். இரண்டு மாதம் அவகாசம் கொடுத்தால் அவர்கள் படிப்பு முடிந்துவிடும். அதன் பிறகு எந்த முகாமிற்கும் போக நாங்கள் தயார் என்றனர்.
 

Melurnet.com Paypal Donation


Melurnet.com Paypal Donation


Please Donate To Melurnet.com

Latest Websites