Welcome To மேலூர்Net.Com

Home Melur-News இளம்பெண்ணை கற்பழித்து திருமணத்துக்கு மறுத்த வாலிபர் போலீசில் புகார்

இளம்பெண்ணை கற்பழித்து திருமணத்துக்கு மறுத்த வாலிபர் போலீசில் புகார்

E-mail Print
மேலூர் பகுதியை சேர்ந்தவர் மணி, அவரது மகள் கார்த்திகை செல்வி (வயது25). இவர் காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் படித்து வந்தார். அப்போது கார்த்திகை செல்விக்கும், அதே கல்லூரியில் படித்த காரைக்குடி பகுதியை சேர்ந்த மணிமுத்து (29) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
 
கல்லூரி முடிந்து வெளி யேறியதும் அவர்கள் சந்திக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிமுத்து, கார்த்திகை செல்வியை சந்தித்தார். அப்போது உன்னையே நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்றார். இதனை நம்பிய கார்த்திகை செல்வி மணிமுத்துவின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவரிடம் மணிமுத்து உல் லாசம் அனுபவித்தார். அதன் பின்னர் கார்த்திகை செல்வியை அவர் சந்திக்க வில்லை.
 
சந்தேகம் அடைந்த கார்த்திகை செல்வி நேராக மணிமுத்துவின் வீட்டுக்கு சென்றார். அங்கு மணிமுத்துவின் தந்தை சண்முகம், தாய் ராணி ஆகியோரிடம் நடந்தவற்றை கூறினார். ஆனால் அதற்கு அவர்கள் வரதட்சணையாக 100 பவுன் தந்தால் தான் என் மகன் உன்னை திருமணம் செய்வான் என்று கூறி கார்த்திகை செல்வியை மிரட்டியதாக அவர் மேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
 
போலீசார் மணிமுத்து உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
 

Melurnet.com Paypal Donation


Melurnet.com Paypal Donation


Please Donate To Melurnet.com

Latest Websites