Welcome To மேலூர்Net.Com

Home Melur-News நான்கு மாணவர்களுக்கு சத்துணவு சமைக்க மூன்று ஊழியர்கள்

நான்கு மாணவர்களுக்கு சத்துணவு சமைக்க மூன்று ஊழியர்கள்

E-mail Print
நான்கு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு சமைக்க மூன்று ஊழியர்கள், பாடம் கற்பிக்க இரண்டு ஆசிரியர்கள் என, வித்தியாசமான ஒரு துவக்க பள்ளி மேலூர் அருகே செயல்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம் வெள்ளலூர் ஊராட்சியில் உள்ளது வெள்ளநாயகம்பட்டி. இங்கு ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் வரை உள்ள துவக்கப்பள்ளி உள்ளது. அதில் ஒரு தலைமை ஆசிரியை, ஒரு உதவி ஆசிரியை பணியில் உள்ளனர். இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்புகளில் ஒரு மாணவர் கூட இல்லை. இரண்டாம் வகுப்பில் இரண்டு பேர், நான்காம் வகுப்பில் மூன்று பேர், ஐந்தாம் வகுப்பில் ஐந்து பேர் உள்ளதாக கணக்கில் உள்ளது. ஆனால் நான்கு மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வருகின்றனர்.

இந்த நான்கு மாணவர்களுக்கு சத்துணவு சமைக்க ஒரு அமைப்பாளர், ஒரு சமையலர், ஒரு உதவியாளர் என மூன்று பேர் பணியில் உள்ளனர். கடந்த 1956ல் துவக்கப்பட்ட இப்பள்ளியில் ஆரம்பத்தில் அதிக மாணவர்கள் இருந்தனர். 2005ம் ஆண்டில் 25 மாணவர்கள் என குறைந்து, தற்போது 5 மாணவர்கள் ஆகிவிட்டனர். இப் பள்ளியில் மாணவர்களுக்கான நூலகம், "டிவி', டி.வி.டி., சுத்தகரிக்கப்பட்ட தண்ணீர் என அனைத்து வசதிகளும் உள்ளது.இவ்வூரில் இருந்து உறங்கான்பட்டி, கட்டச்சோலைபட்டி, மேலூர் என 10 கி.மீ., தூரம் அப்பால் உள்ள மெட்ரிக் பள்ளிகளுக்கு மாணவர்கள் அனுப்பப்படுகின்றனர். ஆனால் இவ்வளவு வசதிகள் உள்ள இப்பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப பெற்றோர்கள் விரும்பவில்லை. இங்குள்ள ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு ஊழியர்களை பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கலாம். அந்த நான்கு மாணவர்களை அருகில் உள்ள வேறு பள்ளிக்கு மாற்றினால், அரசுக்கு வீண் செலவு மிச்சமாகும்.

 

Melurnet.com Paypal Donation


Melurnet.com Paypal Donation


Please Donate To Melurnet.com

Latest Websites