மதுரை கலெக்டர் மதிவாணன் அறிக்கை :ரேஷன் கார்டுகளை தணிக்கை செய்யும் பணி முடிக்கப்பட்டுள்ளது. தணிக்கையின்போது, வீட்டில் வசிக்காத குடும்பங்கள், முகவரி மாறிய ரேஷன் கார்டுகள் குறித்த விபரம் ரேஷன் கடையில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, முறையீடு செய்ய ஏதுவாக, பொருட்கள் வாங்கும் ரேஷன் கடையிலேயே இலவச படிவம் வழங்கப்படுகிறது. அதில் உள்ள விபரங்களை பூர்த்தி செய்து, ரேஷன் கார்டு நகல் மற்றும் இருப்பிட ஆதாரச் சான்று (வாக்காளர் அடையாள அட்டை, வீட்டுவரி ரசீது, டிரைவிங் லைசென்ஸ், காஸ் பில் ரசீது, பாஸ்போர்ட், தபால் துறை அடையாள அட்டை, பாங்க் பாஸ் புக்) ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை இணைத்து, ரேஷன் கடையிலேயே கொடுத்து, ஒப்புதல் சீட்டு பெற வேண்டும். முறையீடு மனுக்களை ஜன.,31க்குள் கொடுக்கலாம். முறையீடு மனு அளித்த ரேஷன் கார்டுகளுக்கு, அதன்மீதான இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை தொடர்ந்து பொருட்கள் வழங்கப்படும். வசிக்காத குடும் பங்களுக்குரிய ரேஷன் கார்டுகள் மட்டுமே ரத்து செய்யப்படும்.
இதுதொடர்பாக சந்தேகம் இருந்தால், தொடர்பு கொள்ள வேண்டிய எண்
மேலூர் : 94450 00341


