மேலூர் அருகே புதுசுக்காம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சிலோன் காலனி பகுதி. இங்குள்ள 2 மற்றும் 3-வது வார்டு பகுதியை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆண் கள் மற்றும் பெண்கள் இன்று காலை மேலூர் தாலுகா அலுவகத்திற்கு திரண்டு வந்தனர்.
அவர்கள் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை, அரசு திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை, அரசு உதவி கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை என்று கூறி தாலுகா அலுவகத்தை முற்றுகையிட்டனர்.
மேலூர் எம்.எல்.ஏ.வின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சிலோன் காலனியில் புதிய ரேசன் கடை கட்டுவதற்கு போதிய நிதி ஒதுக்கியும் கடை கட்டப்படாமல் உள்ளது. குறிப்பிட்ட அந்த இடம் அரசு ஆக்கிரமிப்பில் உள்ள தாக கூறி வேறு இடத்திற்கு ரேசன் கடையை கொண்டு செல்லப்படும் என்று அதி காரிகள் அறிவித்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று கிராம மக்கள் போராடத்தில் ஈடுபட்டனர். அத்துடன் தங்களது ரேசன் கார்டுகளையும் ஒப்படைக்க போவதாக அவர்கள் கூறி னர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் மேலூர் தாசில்தார் சுப்பு அம்மாள், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.


