Welcome To மேலூர்Net.Com

Home Melur-News மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள்

மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள்

E-mail Print
தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையிலான மண்டல அளவிலான தடகள போட்டிகள் செட்டிநாடு அண்ணாமலை பாலிடெக்னிக்கில் நடந்தது.
 இதில் 172 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை லதா மாதவன் பாலிடெக்னிக் பெற்றது. இக் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு சிவில் மாணவர் மாயக் கிருஷ்ணன் 400 மீ., 800 மீ., 1500 மீ., ஓட்ட போட்டியில் முதலிடம் பெற்றார்.  இதனால் 28 புள்ளிகள் இவருக்கு அளிக்கப்பட்டு தனி நபர் சாம்பியன் பட்டமும் வென்றார். இரண்டாவது இடத்தை 26 புள்ளிகள் பெற்று இதே கல்லூரி மாணவர் ரங்கசாமி பெற்றார்.
 மாநில அளவிலான ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தல் போட்டி தென்காசி அருகில் உள்ள பாவூர் சத்திரம் எம்.எஸ்.பி.வி.எல்., பாலிடெக்னிக்கில் நடந்தது. இதில் எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், சிவில் பிரிவுகளில் முதல் இடத்தை லதா மாதவன் கல்லூரி மாணவர்கள் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை சேர்மன் மாதவன், முதல்வர் சேதுபதி, ஆசிரியர்கள் பாராட்டினர்.
 

Melurnet.com Paypal Donation


Melurnet.com Paypal Donation


Please Donate To Melurnet.com

Latest Websites