Welcome To மேலூர்Net.Com

Home Melur-News மேலூரில் பெரியாறு கால்வாயில் சாக்கடை கலப்பதை தடுக்க நடவடிக்கை: மாவட்ட வருவாய் அதிகாரி உத்தரவு

மேலூரில் பெரியாறு கால்வாயில் சாக்கடை கலப்பதை தடுக்க நடவடிக்கை: மாவட்ட வருவாய் அதிகாரி உத்தரவு

E-mail Print
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாளில் மேலூர் பகுதியில் பெரியாறு பாசன வாய்க்கால் நீரில் விவசாயத்தை பாதிக்க கூடிய வகையில் ஆற்றில் மருத்துவமனை கழிவு, வீடுகளின் சாக்கடை நீர், மனிதக்கழிவு ஆகியவை பைப் லைன் மூலமாக கால்வாயில் இணைத்து 27 இடங்களில் கலக்கிறது.

இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் சங்க தலைவர் மீனாட்சிசுந்தரம் கோரிக்கை விடுத்தார்.
 
இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் மதிவாணன் உத்தரவிட்டார். இதன்படி மாவட்ட வருவாய் அலுவலர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் பெரியாறு வாய்க்காலில் சாக்கடை கலக்கும் பகுதிகளை நேரில் ஆய்வு செய்து நீரில் சாக்கடை கலப்பதை ஒரு வார காலத்திற்குள் தடுக்க வேண்டும் என பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு அவர் சம்பவ இடத்திலேயே உத்தரவிட்டார்.
 

Melurnet.com Paypal Donation


Melurnet.com Paypal Donation


Please Donate To Melurnet.com

Latest Websites