கால்வாயில் வைகை அணை தண்ணீர் வரும் போது, கழிவு நீர்வெளியில் தெரிவதில்லை. ஓட்டல் கழிவுகள், மற்றும் குடியிருப்பு பகுதி கழிவுகளை அடித்து வரும் இக்கால்வாய் நீர் தான் கண்மாய்களில் தேக்கப்படுகிறது. அவற்றைவிவசாயத்திற்கும், குளிக்கவும் பயன்படுத்துகின்றனர். ஆடு மாடுகளும் அத் தண்ணீரையே குடிக்கின்றன. கிராமப் பகுதிகளில் தொற்று நோய் ஏற்படுவதற்கு இக்கழிவு நீர் கலந்த கால்வாய் நீரும் முக்கிய பங்கு வகிக்கிறது. கால்வாய் நீரில் கழிவு நீர் கலப்பதை தடுக்க சம்பந்தப்பட்டவர்கள் முன் வர வேண்டும்.


