Welcome To மேலூர்Net.Com

Home Melur-News கூடுதல் தண்ணீர் திறக்க கோரிக்கை

கூடுதல் தண்ணீர் திறக்க கோரிக்கை

E-mail Print
பெரியாற்று கால்வாயின் கடைமடை பகுதியான மேலூர் பகுதிக்கு மேலும் தண்ணீர் திறக்க வேண்டும் என சாமி எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறி உள்ளதாவது : ஒரு போக சாகுபடி பகுதியான மேலூர், விவசாயத்தை நம்பி உள்ள பகுதி. பருவக் காலம் கடந்து இப்பகுதியில் தண்ணீர் திறக்கப்பட்டு, அதுவும் தற்போது முறை பாசனமாக மாற்றப்பட்டுள்ளது. அறுவடையை நெருங்கி உள்ள நிலையில் முறை பாசனம் போக, பயிரை காப்பாற்ற கூடுதல் தண்ணீர் தேவை. விவசாயிகள் நலன் கருதி மேலும் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
 

Melurnet.com Paypal Donation


Melurnet.com Paypal Donation


Please Donate To Melurnet.com

Latest Websites