கொட்டாம்பட்டி அருகே உள்ள கருங்காலக்குடியை சேர்ந்தவர் திருநீலகண்டன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நித்யா (28). நித்யாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த சேது என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை நீலகண்டனின் சகோதரர் கருப்பையா கண்டித்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நித்யா, சேது, இவரது மனைவி ராஜாமணி ஆகிய 3 பேரும் சேர்ந்து கருப்பையாவை சரமாரியாக தாக்கினர்.
இது குறித்த புகாரின் பேரில் கொட்டாம்பட்டி போலீசார் நித்யா உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


