கொட்டாம்பட்டி ஒன்றியம் பொட்டபட்டியைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவரின் மகன் பாலகிருஷ்ணன் என்ற பாலாஜி(20). திண்டுக்கல்லில் கேட்டரிங் கல்லூரியில் படித்து வந்த அவர் கல்லூரியை விளம்பரப்படுத்துவது சம்பந்தமாக, சிங்கம்புணரியில் நண்பர்களுடன் தங்கி இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு பொட்டபட்டிக்கு சென்று வருவதாக கூறி உடன் தங்கியிருந்த கொடைக்கானலைச் சேர்ந்த நண்பர் முருகேசன் என்பவரை பைக்கில் (ஹெல்மெட் அணியவில்லை) ஏற்றி வந்தார்.
சொக்கலிங்கபுரம் அருகே வந்த போது, எதிரே கொட்டாம்பட்டியிலிருந்து சிங்கம்புணரிக்கு சென்று கொண்டிருந்த கார் மோதியதில் பாலகிருஷ்ணன் அதே இடத்தில் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த முருகேசன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். காரை கைப்பற்றிய போலீசார், தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்


