மேலூர் அருகே நடந்த கோஷ்டி மோதலில், 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலூர் அருகே காயம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன். ரியல் எஸ் டேட் தொழில் செய்கிறார். அதே பகுதியை சேர்ந்தவர் கோதண்டராமன். இருவரது நிலமும் அருகருகே உள்ளது. நிலத்தில் மழைநீர் ஓடி
யது தொடர்பாக இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, கோஷ்டிக ளாக மோதிக் கொண்டனர். இதுதொடர்பாக இரு தரப்பி
னரும் மேலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.மணிகண்டன் புகாரின் பேரில் கோதண்டராமன், இவரது உறவினர்கள் பிரபு, ஆனந்த், ரகுபதி, செல்வம் ஆகியோர் மீதும் கோதண்டராமன் புகா
ரின் பேரில் ராஜேந்திரன், ராஜசேகர், சோமன், மணிகண்டன், விஜயபாண்டியன் ஆகியோர் மீதும் போலீசார் வழக்
குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


