மேலூர் அருகே கோட்டநத்தம் பட்டி -வெள்ளலூர் சந்திப்பு விலக்கில் ஏராளமான கடைகள் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது. எனவே ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி நேற்று நெடுஞ்சாலைத்துறையினர், வருவாய்த்துறையினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆக்கிரமித்து கட்டப்பட்ட 15 கடைகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தரை மட்டமாக்கினர்.
இதற்கு கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் கீழவளவு போலீசார் அவர்களை சமரசப்படுத்தினர்


