கீழையூர் கிராமத்தை சேர்ந்த வர் முத்துசாமி (வயது55), விவசாயி. இவருக்கு சொந்த மான விவசாய நிலம் சக்திவேல் கண்மாய் ஓரம் உள்ளது. இன்று காலை வயலுக்கு சென்ற முத்துசாமி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் வயலுக்கு சென்றனர். அப் போது முத்துசாமி பிண மாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
விசாரணை
இது குறித்து கீழவளவு போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் விரைந்தனர். பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முத்துச்சாமி எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டு வயலில் வீசப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.


