திருவாதவூரில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் முடிந்த நிலையில் வடமாடு மஞ்சுவிரட்டுக்கு, அரசு தடை விதித்தது.
திருவாதவூரில் ஆண்டுதோறும் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் இதற்காக ஆர்.டி.ஓ.,விடம் அனுமதி கோரி, அனுமதியும் பெறப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன், அரசு தரப்பில், மஞ்சுவிரட்டு தொடர்பாக கூட்டம் நடத்தப்பட்டது. அதில் வங்கியில், இரண்டு லட்ச ரூபாய் டெபாசிட் செய்யுமாறு உத்தர
விடப்பட்டது.தொகையை டெபாசிட் செய்த விழக் குழுவினர், இன்று ஜல்லிக் கட்டு நடைபெறவிருந்த இடத்தில் மேடை, அதை சுற்றி பேரிகார்டு உட்பட பல ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில், வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை நிறுத்த அரசு, நேற்று உத்தரவிடப்பட்டது.
தாசில்தார் சுப்பு கூறியதாவது: மஞ்சுவிரட்டிற்கான கெஜட்டில், திருவதாவூர் பெயர் இல்லை. எனவே அங்கு நடை பெற உள்ள மஞ்சுவிரட்டை தற்காலிகமாக நிறுத்தும்படி, மதுரை குற்றவியல் அலுவலக மேலாளர் உத்தரவிட்டுள்ளதால் திருவாதவூரில் மஞ்சுவிரட்டு நடத்த தடை விதிக்கப்படுகிறது, என்றார்.
திடீர் தடையால் மஞ்சுவிரட்டு பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


