மேலூர் நகரசபை அலுவலகம் எதிரே சாலை கரையான் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் குறைந்த அளவு தண்ணீரே உள்ளது. இன்று காலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்தார். அதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மேலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் மேலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வனமூர்த்தி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றினர்.
விசாரணையில் பிணமாக கிடந்தவர் பெயர் முருகன், கொலு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்து உள்ளார். அவர் எப்படி இறந்தார்? இறந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


