மயில்களின் சரணாலயமாகுமா இடையபட்டி
Thursday, 31 December 2009 07:33
திருவாதவூர் அருகே இடையபட்டியில் ஏராளமாக மயில்கள் உள்ளன. வெள்ளிமலையாண்டி கோயில் பகுதியில், மயில்கள் வசிக்கின்றன. கோயில் அருகிலேயே இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை மையம் அமைக்கப் படுகிறது. மையம் அமைப்பதற்காக வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக புதிய மரங்கள் ஊன்றப்பட வேண்டும். இப்பகுதியை மயில்களின் சரணாலயமாக அறிவித்தால் மட்டுமே இவை சாத்தியம்.