மூதாட்டியை ஏமாற்றி ஏழு பவுன் செயினை பறித்துச் சென்றவரை, மேலூர் போலீசார் தேடி வருகின்றனர்.
மேலூர் கோமதியாபுரத்தை சேர்ந்தவர் மரகதம்(70). இவரது மகன் கோவிந்தராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். நேற்று 50 வயதுள்ள ஒரு நபர் மரகதத்திடம் வந்து, அவரது மகன் அனுப்பியதாக கூறினார்.
தன்னிடம் செக் ஒன்றை கோவிந்தராஜ் கொடுத்துள்ளதாகவும், அதற்கு நகை வாங்கி கொடுக்கும்படி கூறியதாகவும் கூறினார். மரகதம் கழுத்தில் இருந்து 7 பவுன் செயினை மர்ம நபர் வாங்கி டிசைன் பார்த்துள்ளார். தனது மருமகள் மணிமேகலையை கூட்டி வருதாக, வீட்டிற்குள் மரகதம் சென்றார். மீண்டும் வெளியில் வந்து பார்த்த போது நகையுடன் அந்த நபர் மாயமாகியிருந்தார். மேலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


