மேலவலசை கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவர் கீழவளவு போலீசில் கொடுத்துள்ள புகார் மனு வில் கூறி இருப்பதாவது:-
எனது மகன் பூபதி அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் நெல்லையை சேர்ந்த உமாகோமதிக்கும் 2007-ல் திருமணம் நடந்தது. இருவரும் அமெரிக்காவில் குடித்தனம் நடத்தினர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் ஊருக்கு வந்த உமாகோமதி நெல்லை கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஆனால் எங்களுக்கு தெரியாமல் மேலூர் பாங்கியில் உள்ள லாக்கரில் நகையை உமாகோமதி எடுத்து சென்று விட்டு தற்போது விவாகரத்து கேட்டு மிரட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.
போலீசார் உமாகோமதி, அவரது தந்தை பாலசுப்பிரமணியன் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


