Welcome To மேலூர்Net.Com

Home Melur-News 20 கிராமங்களில், குடிநீருக்காக ஆழ்குழாய்கள் பதிக்கும் பணி நிறைவு: மத்திய மந்திரி மு.க.அழகிரி ஏற்பாடு

20 கிராமங்களில், குடிநீருக்காக ஆழ்குழாய்கள் பதிக்கும் பணி நிறைவு: மத்திய மந்திரி மு.க.அழகிரி ஏற்பாடு

E-mail Print
கொட்டாம்பட்டி மற்றும் மேலூர் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக மத்திய மந்திரி மு.க. அழகிரி முயற்சியால் மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் ஒதுக்கீட்டில் 20 இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க உத்தரவிட்டிருந்தார்.
 
இந்த ஆழ்குழாய் கிணறுகள் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தும்பைப்பட்டி, சொக்கலிங்கபுரம், மேல வளவு, சென்னகரம்பட்டி, அட்டப்பட்டி ஆகிய கிராமங்களிலும், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத் தில் உள்ள குலமங்கலம் பொதும்பு, கோவில் பாப்பாக்குடி, அதலை ஆகிய கிராமங்களும், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இடையப்பட்டி, கள்ளந்திரி, வெள்ளியங்குன்றம், நர சிங்கம், கருப்பாயூரணி ஆகிய கிராமங்களிலும், மேலூர் ஊராட்சி ஒன்றியத் தில் உள்ள கிடாரிப்பட்டி, வெள்ளலூர், உறங்கான் பட்டி, வலையப் பட்டி, நாவினிப்பட்டி ஆகிய கிராமங்களிலும் குடிநீர் வழங்குவதற்காக ஆழ்குழாய் கிணறு பதிக்கும் பணிகள் நிறைவடைந்து உள்ளது.
 
இந்த கிராமங்களில் குடிநீர் வழங்கலின் அவசியம் மற்றும் அத்தியாவசி யத்தை கருத்தில் கொண்டு இப்பணிகள் விரைந்து முடிக்க மு.க.அழகிரி உத்தர வின் பேரில் இப்பணிகள் விரைந்து தற்போது முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
 

Melurnet.com Paypal Donation


Melurnet.com Paypal Donation


Please Donate To Melurnet.com

Latest Websites