Welcome To மேலூர்Net.Com

Home Melur-News மேலூர் அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடித்து தரைமட்டம்; பொதுப்பணித்துறை அதிரடி

மேலூர் அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடித்து தரைமட்டம்; பொதுப்பணித்துறை அதிரடி

E-mail Print
மேலூர் அருகே ஒத்தக்கடை தோட்டம் பகுதியில் வவ்வால் தோட்டம் உள்ளது. இங்கு உள்ள கண்மாய் கரையில் ஏராளமானோர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி உள்ளனர். பொதுப் பணித்துறையினருக்கு சொந்தமான இந்த இடத்தில் ஆக்கிரமித்தவர்கள் உடனே வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 
ஆனால் தொடர்ந்து அப்பகுதியில் குடிசை போட்டு வசித்து வந்தனர். இன்று காலை மாவட்ட பொதுப்பணித்துறை மற்றும் நீர் வளத்துறையினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தரை மட்டமாக்கினர்.
 
இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் இளந்திரையன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
 

Melurnet.com Paypal Donation


Melurnet.com Paypal Donation


Please Donate To Melurnet.com

Latest Websites