Welcome To மேலூர்Net.Com

Home
E-mail Print
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியை சேர்ந்த, 35 பேர் சென்னையில் உறவினரின் திருமணத்திற்காக வேனில் சென்றனர். திருமணம் முடிந்து நேற்று அதே வேனில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அதிகாலை 4.50 மணிக்கு கொட்டாம்பட்டி அருகே சீயந்தான்பட்டி விலக்கு பாலம் அருகே வந்தபோது, பழுதாகி நின்ற லாரியின் பின்புறம் வேன் மோதியது. இதில் வேனில் வந்த பிரமிளாகுமாரி(40), நாகப்பன்(55), கிருஷ்ணன் குட்டி(45) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். டிரைவர் கிருஷ்ணகுமார்(42), நளினம்(65), சொர்ணம்பிள்ளை(49), மணிகண்டன்(40), அபி(10), அஸ்வின்(10), ஆனந்த்(8) உட்பட 20 பேர் மதுரை அரசு மருத்துவமனையிலும், மீனாட்சி மிஷன் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  வேன் டிரைவர் ஓய்வு இல்லாமல் ஓட்டியதால், அதிகாலையில் ஏற்பட்ட தூக்க கலக்கத்தினால் விபத்து நேர்ந்தது. பாலத்தின் மீது பழுதடைந்த லாரியை நிறுத்தி வைத்திருந்ததும் விபத்துக்கு காரணம்.
 

Please Donate To Melurnet.com

Latest Websites