Welcome To மேலூர்Net.Com

Home Melur-News விளையாட்டு விழா

விளையாட்டு விழா

E-mail Print
கிடாரிப்பட்டி லதா மாதவன் பாலிடெக்னிக்கில் விளையாட்டு மற்றும் விடுதி விழா நடந்தது. விளையாட்டு விழாவிற்கு நிறுவனத் தலைவர் மாதவன் தலைமை வகித்தார். போலீஸ் துணை கமிஷனர் தேன்மொழி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை ஆணைய மாற்றுத் திறன் உடையோர் பயிற்சியாளர் ரஞ்சித் குமார் பேசினர். மாணவர்களில் மாயகிருஷ்ணனும், மாணவிகளில் ஜெயஸ்ரீயும் தனி நபர் சாம்பியன் பட்டம் பெற்றனர். ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப்பை கல்லூரியின் நீல நிற அணி பெற்றது. விடுதி விழாவில் குப்புச்சாமி வரவேற்றார். ஆண்டறிக்கையை மீனாட்சி சுந்தரம் வாசித்தார். சுப. மாரிமுத்து, தாசில்தார் சுப்பு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் சேதுபதி, நிறுவனர் மாதவன் கலந்து கொண்டனர். உதயகுமார் நன்றி கூறினார்.
 

Melurnet.com Paypal Donation


Melurnet.com Paypal Donation


Please Donate To Melurnet.com

Latest Websites