கொட்டாம்பட்டி ஒன்றியம் சின்னக் கொட்டாம் பட்டியில் மந்தை அருகே உள்ள மின்விளக்கு கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து இரவு, பகல் முழுவதும் எரிந்து கொண்டிருக்கிறது.
இப்பகுதி மக்கள் கூறியதாவது: தெருவிளக்கு தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பது குறித்து மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்தோம். அதற்கு மின்சார வாரிய அலுவலர்கள் தெருவிளக்கிற்கென்று தனியாக பியூஸ் கேரியர் மாட்டவேண்டும். ஊராட்சி நிர்வாகம் பியூஸ் கேரியர் வழங்கினால் தான் தெருவிளக்கு எரிவதை நிறுத்த முடியும் என தெரிவித்தனர்.மின்தட்டுப்பாடு நிலவும் வேளையில் மின்சாரம் இப்படி தேவையில்லாமல் வீணடிக்கப்படுவதை, சம்பந்தப்பட்டவர்கள் தடுக்க வேண்டும்.


