Welcome To மேலூர்Net.Com

Home Melur-News ஜெயலலிதா பிறந்த நாள்: மேலூரில் கபடி- மாட்டுவண்டி பந்தயம்; சாமி எம்.எல்.ஏ. தகவல்

ஜெயலலிதா பிறந்த நாள்: மேலூரில் கபடி- மாட்டுவண்டி பந்தயம்; சாமி எம்.எல்.ஏ. தகவல்

E-mail Print

மேலூரில் ஜெயலலிதா 62-வது பிறந்த நாளை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேலூர் தொகுதி எம்.எல்.. சாமி தலைமை தாங்கினார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

.தி.மு.. பொதுச்செய லாளர் ஜெயலலிதாவின் 62-வது பிறந்த தினம் சிறப்பாக கொண்டாடும் வகையில் 24-ந்தேதி மேலூர் தொகுதியிலுள்ள கிளை கழகங்களில் கொடி ஏற்றி பொங்கல் வழங்குவது. மேலும் அன்று காலை 7 மணிக்கு சர்வமத வழிபாடு, மதியம் காஞ்சிவனம் மந்தை திடலில் பல்லாயிரக்கணக் கானோருக்கு பிரியாணி விருந்து நடைபெறும்.

வருகிற 26, 27, 28 ஆகிய 3 நாட்கள் காஞ்சிவனம் சுவாமி மந்தை திடலில் மாநில அளவிலான மாபெரும் கபாடி போட்டி மற்றும் 2 நாட்கள் மாட்டுவண்டி பந்தயம் நடைபெறுகிறது. பொதுக்கூட்டம் நலத்திட்ட உதவிகள் விழா மற்றும் சி.எஸ்.. ஊனமுற்ற பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு ஆகியன சிறப்பாக நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயராமன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் தமிழரசன், முன்னாள் அமைப்பு செயலாளர் ராஜேந்திரன், மேலூர் நகர் செயலாளர் சரவணன், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், கொட்டாம் பட்டி ஒன்றிய செயலாளர் வெற்றிச் செழியன், தொகுதி செயலாளர் செல்வம் என்ற பெரியபுள்ளான், இணைச் செயலாளர்கள் ஜீவசன்மார்க்கம்.

சின்னக்கருப்பன், .வல் லாளப்பட்டி, செயலாளர் .கே.உமாபதி, கவுன்சிலர் ஜி.சுப்பிரமணியன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் சூரக்குண்டு எஸ்.அம்பலம், மாவட்ட மருத்துவ அணி பொருளாளர் டாக்டர் அல்லா, மாவட்ட இலக்கிய அணி மலைச்சாமி, சுக்காம் பட்டி ராசு, தாண்டவன், மாவட்ட சிறுபான்மை பிரிவு ஷாஜகான், நகர் பேரவை செயலாளர் சாகுல் அமீது, நகர் இளை ஞரணி செயலாளர் அன்புக் கரசு மற்றும் ஒன்றிய நகர் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Melurnet.com Paypal Donation


Melurnet.com Paypal Donation


Please Donate To Melurnet.com

Latest Websites