Welcome To மேலூர்Net.Com

Home Melur-News விவசாய கல்லூரியில் கலை விழா

விவசாய கல்லூரியில் கலை விழா

E-mail Print
தமிழகம் முழுவதிலும் இருந்து 25க்கும் மேற்பட்ட கல்லூரிகள் கலந்து கொண்ட 'டேலன்சியா 2010' கலை விழா மதுரை விவசாய கல்லூரியில் நடந்தது.
 சென்னை வருமான வரித் துறை இணை இயக்குநர் திவாகர் தலைமை வகித்தார். விவசாய கல்லூரி டீன் வைரவன், மனையியல் கல்லூரி பானுமதி முன்னிலை வகித்தனர். தமிழகம் முழுதிலும் இருந்து மருத்துவ கல்லூரி, இன்ஜினியரிங், விவசாயம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இதில் கலந்து கொண்டனர். இளைஞர்களின் கலைத் திறனை வெளி கொண்டு வரும் வகையில், கிளாசிக்கல் நடனம், நாட்டுப்புற நடனம், குழு நடனம், பாட்டுப் போட்டி, கார்ட்டூன், வினாடி வினா, ரங்கோலி உட்பட பல போட்டிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியை கல்லூரி பேராசிரியர்கள் அனந்தகுமார், சிவசுப்பிரமணியன் மற்றும் மாணவர் மன்ற தலைவர் அனீஸ் ஏற்பாடு செய்திருந்தனர்.
 

Melurnet.com Paypal Donation


Melurnet.com Paypal Donation


Please Donate To Melurnet.com

Latest Websites