Welcome To மேலூர்Net.Com

Home Melur-News

Melur News

Melur News

போலி விசா மூலம் சிங்கப்பூர் அனுப்பினர் 8 பேரை ஏமாற்றி 12 லட்சம் மோசடி கணவன்-மனைவி உள்பட 5 பேர் மீது புகார்

E-mail Print
கொட்டாம்பட்டியை சேர்ந்தவர் வினோத். இவர் தென்மண்டல ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தியிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
 
நான் படிப்பை முடித்து விட்டு வேலையின்றி இருந்தேன். எனது ஊரை சேர்ந்த மோகன்ராஜ் என்னையும், எனது நண்பர்கள் செந்தில்குமார், பொன்னையன், மாடசாமி, பொன்னுசாமி, மந்தக்காளை, செந்தில் மற்றொரு செந்தில் ஆகியோரிடம் சிவகங்கை மாவட்டம் ஏரியூரை சேர்ந்த தினேஷ்குமார், அவரது மனைவி சுமதி ஆகியோர் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறினர்.
 
இதனை நம்பிய நாங்கள் 8 பேரும் அவர்களை சந்தித்து பேசினோம். பாஸ்போர்ட்டையும் கொடுத்தோம். சில வாரம் கழித்து எங்களுக்கு போன் செய்து உங்கள் அனைவருக்கும் விசா வந்து விட்டது. தலா ரூ.1.40 லட்சம் கட்டுங்கள் என்றனர். இதனை நம்பிய நாங்கள் கடந்த மாதம் 19-ந்தேதி தினேஷ்குமார், சுமதி தம்பதியிடம் மொத்தம் ரூ.12 லட்சத்து 10 ஆயிரம் கொடுத்தோம்.
 
இதையடுத்து கடந்த 3-ந்தேதி சென்னையில் இருந்து சிங்கப்பூர் சென்றோம். அங்கு நாங்கள் எடுத்து சென்ற விசா உள்ளிட்ட ஆவணங்கள் போலியானவை என்று கூறி சிறையில் அடைத்து விட்டனர். பின்னர் 2 நாட்கள் கழித்து அரசு செலவில் ஊருக்கு வந்து சேர்ந்தோம்.
 
எனவே ஏஜென்டுகளாக செயல்பட்டு எங்களை மோசடி செய்த தினேஷ் குமார், அவரது மனைவி சுமதி, இப்ஸ்ட்சன், மோகன் ராஜ், லோகேஷ் ஆகிய 5 பேர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.
 
இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரை உட னடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி குற்றப்பிரிவு போலீசாருக்கு ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார்.
 

மாணவர்கள் ரோடு மறியல்

E-mail Print
மாணவனை போலீசார் தாக்கியததை கண்டித்து, நேற்று மேலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ரோடு மறியல் செய்தனர். மேலூர் அரசு கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று காலை கருங்காலக்குடியில் இருந்து அரசு பஸ்சில் வந்தார். கல்லூரி முன்பு பஸ் நிற்காமல் மேலூர் பஸ் ஸ்டாண்டிற்கு வந்தது. இதனால் பஸ் டிரைவர், கண்டக்டருக்கும் மாணவருக்கும் தகராறு ஏற்பட்டது.இப்பிரச்னையில் மேலூர் போலீசார் மாணவரை தாக்கியதாகக் கூறி, கல்லூரி மாணவர்கள் போலீசாரை கண்டித்து ரோடு மறியலில் ஈடுபட்டனர். சமாதான பேச்சு வார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்.
 

வீடுகளில் திருடிய 2 மாணவர்கள் கைது

E-mail Print
கொட்டாம்பட்டி போலீஸ் சரகம் ஆவாரங்காடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் அவரது மனைவி செல்வி. இவர் சம்பவத்தன்று ஆடு மேய்க்க சென்றார்.
 
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய “மர்ம” நபர்கள் பட்டப்பகலில் ஓடுகளை பிரித்து உள்ளே இறங்கினர். பின்னர் பீரோவை திறந்து அதில் இருந்த 5 பவுன் நகை, ரொக்க பணம் ஆகியவற்றை சுருட்டிக் கொண்டு தலைமறைவானார்கள். வீட்டுக்கு வந்த செல்வி நகை-பணம் கொள்ளைபோனது கண்டு பதறி போனார்.
 
இதேபோல் நாட்டாமங்கலத்தைச்சேர்ந்த செங்கல் சூளை அதிபர் செங்குட்டுவன் வீட்டிலும் நகை கொள்ளை போனது. தொடர் திருட்டை தடுக்க கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
 
தனிப்படையினர் தீவிரமாக துப்புதுலக்கினர். நேற்று மதியம் கொட்டாம் பட்டி பகுதியில் 2 பேர் சந்தேகப்படும்படி திரிந்தனர். அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
 
விசாரணையில் அவர்கள் 2 பேரும் செல்வி, செங்குட்டுவன் வீடுகளில் திருடியதை ஒப்புக்கொண்டனர். அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களது பெயர் மதுரைவீரன் (வயது15), பாண்டிசெல்வம் (15) காடம்பட்டியை சேர்ந்த 2 பேரும் கருங்காலக்குடி அரசு பள்ளியில் படித்து வந்தனர். இவர்களிடம் இருந்து நகை-பணம் பறி முதல் செய்யப்பட்டது.
 

கத்தார் நாட்டில் அரிட்டாபட்டி வாலிபர் பலி

E-mail Print
அரிட்டாபட்டியைச் சேர்ந்தவர் சேவுகப்பெருமாள்(24). இவருக்கு மனைவி லட்சுமி, ஒன்றரை வயது மகன் பார்த்தசாரதி உள்ளனர்.
நான்கு நாட்களுக்கு முன், கத்தார் நாட்டில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த போது, விபத்தில் சிக்கி சேவுகப் பெருமாள் இறந்தார்.
அவரது உடலை மதுரை கொண்டு வர முடியாமல் குடும்பத்தினர் தவித்தனர். இதை அறிந்த மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தூதரக அதிகாரிகள் மற்றும் அங்குள்ள நண்பர்களை தொடர்பு கொண்டார். இதை தொடர்ந்து நேற்று சொந்த ஊருக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது.
 

அழகர்கோவிலில் பங்குனி விழா

E-mail Print
அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பல்வேறு திருவிழாக்கள் நடந்து வருகின்றன. ஆண்டுதோறும் நடக்கும் பங்குனி திருக்கல்யாண திருவிழா இந்த ஆண்டு மார்ச் 26ம் தேதி துவங்குகிறது. அன்று மாலை ஸ்ரீதேவி, பூமாதேவியுடன், சுந்தரராஜ பெருமாள் கோயில் முன் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளுகிறார். மார்ச் 27, 28ம் தேதிகளில் பல்லக்கில் புறப்படும் பெருமாள் கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் மார்ச் 29ம் தேதி காலை 9.45 மணிக்கு மேல் நடக்கிறது. அன்று பிற்பகல் வரை அங்கிருக்கும் பெருமாளுக்கு பல்வேறு ஆராதனைகள் நடக்கின் றன.  ஏற்பாடுகளை துணை ஆணையர் இளம்பரிதி உட்பட பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
 
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  8 
  •  9 
  •  10 
  •  Next 
  •  End 
  • »
Page 1 of 21

Melurnet.com Paypal Donation


Melurnet.com Paypal Donation


Please Donate To Melurnet.com

Latest Websites