பொதுக்கூட்டம்
Sunday, 24 January 2010 06:07
கொட்டாம்பட்டியில் சோஷியல் டெமாக்ரடிக் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. கொட்டாம்பட்டி பேருந்து நிலையம் உள்ளே நடந்த கூட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் அப்துல் அஜீஸ் தலைமையேற்க, செயலாளர் அப்துல் ஹக்கீம் வரவேற்புறையாற்றினார். மாவட்ட பொருளாளர் ரபீக் அஹமத், செயலாளர் சையது இப்ராஹீம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட தலைவர் ஜாபர் சுல்தான், நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அய்யாபட்டி, மணப்பச்சேரி, நாகமங்கலம் ஆகிய இடங்களில் மாவட்ட நிர்வாகிகள் கொடியேற்றினர்.