அரசின் "108' இலவச ஆம்புலன்ஸ்கள் 13 உள்ளன. கடந்த ஓராண்டில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளின் உயிர்களை காப்பாற்றி சாதனை படைத்துள்ளது. நேற்று 50வது பிரசவம் டி.புதுப்பட்டி ஆம்புலன்சில் நடந்தது. திருமங்கலம் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி சின்னம்மாள்(22). நேற்று மாலை பிரசவ வலி ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில், ஆண் குழந்தை பிறந்தது.
""இதுவரை மேலூர் ஆம்புலன்சில் அதிகபட்சமாக 9 பிரசவங்கள், திருமங்கலம் 8, பேரையூர், சமயநல்லூரில் தலா 7, வாடிப்பட்டி 5, சத்திரப்பட்டி 4, கலெக்டர் பஸ் ஸ்டாண்ட் 3, பெரியார் பஸ் ஸ்டாண்ட், தல்லாகுளம், கொட்டாம்பட்டியில் தலா 2 பிரசவங்கள் நடந்துள்ளன,'' என, ஆம்புலன்ஸ் மேலாளர் தணிகைவேல்முருகன் தெரிவித்தார்


